Canada

கனடாவில் ஹுவாவி 5G த​டைகள் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்–சீன தூதுவர் தகவல்!

கனடாவில் 5G வலையமைப்புகள் மற்றும் ஹூவாவி நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் தொழிநுட்பங்களை தடைசெய்தால் அந்த நாடு பெரும் விளைவுகளை சந்திக்கும் என்று, சீன தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த தகவலை, கனடாவிற்கான சீன தூதுவர், ஒட்டாவா நிர்வாகத்திற்கு இரு தரப்புக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்டுள்ள பாரிய வர்த்தக நெருக்கடிகளை அடுத்து அவர் நேற்று (வியாழக்கிழமை) இதனைத் தெரிவித்தார்.

சீன தூதுவர் லூ ஷாயி ஒரு செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கனடா எதிர்நோக்கப்போகும் விளைவுகள் தொடர்பாக மேலதிக விபரங்களை வெளியிடவில்லை

இந்தநிலையில், கனடா 5G தொலைத் தொடர்பில் உள்ள பாதுகாப்பு விடயங்கள் பற்றி கற்று வருகின்றது.

எனினும், சில கூட்டணி நிறுவனங்கள் ஹுவாவி உபகரணங்களை விலக்குவது தொடர்பாக அறிவிக்கவில்லை என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top