News

கேப்பாப்புலவில் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முற்றுகைப் போராட்டம்!

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட செயலகத்தினால் கோரப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், கேப்பாப்புலவு மக்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கேப்பாப்புலவில் உள்ள தங்களது காணிகளை விடுவித்துத் தருமாறு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கேப்பாப்புலவு பிரதேசத்தில் வசித்த 84 குடும்பங்களினால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு மாதகால அவகாசம் வழங்குமாறும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் வாக்குறுதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இப்போராட்டத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த பொதுமக்களும், அருட்சகோதரிகளும் பொது அமைப்புக்களும் கலந்துகொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top