ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இந்தியாவிலும் நில அதிர்வு! மக்கள் பீதி

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வட இந்திய மாநிலங்களில் 6.1 அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, ஆப்கானிஸ்தானில் இருந்து வட பாகிஸ்தானுக்குச் செல்லும் இந்துகுஷ் மலையடி வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு,ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியிருக்கிறது. அந்த நிலநடுக்கம் 40 முதல் 50 வினாடிகள் வரை நீடித்திருந்துள்ளது.

அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக மேற்கு சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 என பதிவாகியதாகவும் இந்திய வானியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த நிலநடுக்கம் டெல்லி உட்பட வடமாநிலங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அனைவரும் பீதியில் வீட்டை விட்டு வெளியேறி, தெருக்கள் மற்றும் திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.