News

இந்தியாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பு தொடர்பில் பிரான்ஸ் எடுத்துள்ள முக்கிய முடிவு

இந்தியாவில் புல்வாமா பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட அமைப்பான ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைவரான மசூத் அஸார் மீது தடை விதிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பைக் கோரும் திட்டம் ஒன்றை பிரான்ஸ் இன்னும் சில நாட்களுக்குள் முன்வைக்க உள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு இத்தகைய திட்டம் ஒன்றை பிரான்ஸ் முன்வைப்பது இது இரண்டாவது முறையாகும்.

2017ஆம் ஆண்டு ஏற்கனவே பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தடைகள் கமிட்டிக்கு அஸாரை தடை செய்யக்கோரும் திட்டம் ஒன்றை அமெரிக்கா முன்வைத்தது.

ஆனால் அந்த திட்டத்திற்கு சீனா முட்டுக்கட்டை போட்டது.

தற்போது புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தாலும், சீனா தன் முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் இன்னொரு நிரந்தர உறுப்பினரான ரஷ்யாவோ அஸார் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதையடுத்து, இந்தியா, FATF என்னும் நிதி மோசடி மீதான நடவடிக்கை எடுக்கும் அமைப்பிடம் பாகிஸ்தானை தடை செய்யப்பட்ட நாடுகள் பட்டியலில் சேர்க்கும்படி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top