News

எவர் மீதும் சார்ந்திராத இலங்கையை உருவாக்க ஒன்றுபட வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

எவர் மீதும் சார்ந்திராத இலங்கையை உருவாக்குவதற்கு நாம் ஒன்றுபட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டு வருகின்றன.

சுதந்திரதினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஏமாற்றுத்தனங்களுக்கும், அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் ஒரு தேசமாக மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாகவே, நமது தேசிய கொடியானது உருவாக்கப்பட்டு, நமக்கே உரிய பன்முகதன்மையை நமது முன்னோர்கள் வெளிப்படுத்தினார்கள்.

71 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையர் பலர் அதுவரை அனுபவித்த காலணித்துவம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனத் தீர்மாணித்தனர்.

அதனால்தான் தற்போதைய இலங்கையானது, சுயாட்சியுடைய இறையாண்மை தேசமாக, சுய ஆணையின் கீழான நீதி நெறிமுறைகளுக்கு அமைவாக இயங்கும் வல்லமையுள்ள தேசமாக திகழ்கிறது.

அவர்கள் ஜாதி மத பேதமின்றி ஒருமித்து நின்று ஒன்றாக பயணித்து சுதந்திரத்தை வென்று அதனை எமக்கு விட்டுச் சென்றுள்ளனர்’ என எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திரதின வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top