Canada

ஒட்டாவாவில் மாயமான 7-வயது சிறுமி பத்திரமாக மீட்பு !

ஒட்டாவாவில் சனிக்கிழமை அன்று மாயமான காலிடி மஸா என்ற 7-வயது சிறுமியை பொது மக்கள் உதவிவுடன் பொலிஸார் பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த காலிடி மஸா என்ற 7-வயது சிறுமி ஒட்டாவா பகுதியில் சனிக்கிழமை அன்று காலை 6- மணியளவில் மாயமாகியுள்ளார்.

குறித்த குழந்தை கிழக்குப் பகுதியான ஒட்டாவா அருகில் உள்ள ட்ரம்ப்லே ரோடு பகுதியில் சுமார் 12:00 -மணியளவில் கடைசியாக தென்பட்டதாக தகவல தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கிடைத்த தகவல் படி உதவி ஆய்வாளர் டேவிட் ஜாக்ரியஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டாவா பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், குறித்த குழந்தை பொது மக்கள் உதவியுடன் பாதுகாப்பபாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த குழந்தையை கண்டுபிடிக்க உதவிய போது மக்களுக்கு ஒட்டாவா பொலிஸாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top