Canada

ஒட்டாவாவில் ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சோகம்!

ஒட்டாவா பகுதியில் பெண் பாதசாரி ஒருவர் மீது ரயில் மோதி கொண்டதில், அவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். ஒட்டாவா பொலிஸார் தகவலில் படி, குறித்த சம்பவம் ஒட்டவா மருத்துவமனை பகுதியில் பிளீஸன் பார்க் வீதிக்கு அருகில் உள்ள பாதையில், சரியாக 2-மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதில், அதிவேகத்தில் விரைந்து வந்த ரயில் குறித்த பெண் பாதசாரி மீது மோதிக்கொண்டதில் அவர் சமப்வ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில், குறித்த ரயிலில் 127 பயணிகள் பயணம் செய்ததாகவும் அவர்கள் காயங்களின்றி உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவென்யூ மற்றும் காவெண்டிஷ் ரோடு இடையே பிளெசண்ட் பார்க் சாலைகள் மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், குறித்த சாலை பகுதியை பயன்படுத்தும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top