Canada

கனடாவின் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தது – மக்கள் உடனே வெளியேற உத்தரவு!

கனடாவின், எட்மன்டனின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு கனடாவின் வானிலை அவதான நிலையம் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வின்ட்சர் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்த மின்சாரம் தடை பட்டுள்ளது.

இதன்படி, கிரிஸ் சிடிகி, கரோலின் டெய்லர், அரோரா பிரவுன் மற்றும் அல்பேட்டா ஆகிய பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக குறித்த பகுதிகளில் மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கனடாவின் சில பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டு வாகன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மெட்ரோ வான்கூவர் நகரில் கடுமையான வானிலை நிலவுவதாகவும், அப்பகுதி மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கனடாவின் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி அப்பகுதிகளில் வீசும் கடுங்காற்றுடனான குளிரான காலநிலை இன்றும் நாளையும் நீடிக்கும் என அந்நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top