Canada

கனடாவின் லண்டன் நகரில் அம்பு தாக்கி உயிரிழந்த நபர் !

கனடாவில் நபர் ஒருவர் அம்பு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரின் வடக்கு பகுதியில் உள்ள வீட்டில் நபர் ஒருவர் நேற்று ஆபத்தான நிலையில் இருப்பதாக அவசர உதவி எண்ணுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து உள்ளூர் நேரப்படி இரவு 12.50 மணிக்கு சம்பவ இடத்துக்கு அவசர உதவி குழுவினர் விரைந்தனர்.

அங்கு நபர் ஒருவர் உடலில் அம்பு பாய்ந்த நிலையில் படுகாயங்களுடன் கிடந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இது தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.  மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top