Canada

கனடாவை உலுக்கிய 11 வயது சிறுமியின் கொலையில் அடுத்த கட்ட விசாரணை!

கனடாவின் பிரம்ப்டன் பகுதியில் தனது 11 வயது சிறுமியை கொடூரமாக முறையில் கொலை செய்த தந்தை மருத்துவனையில் உயிரிழந்துள்ள நிலையில், பொலிஸாரின் அடுத்த கட்ட விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

குறித்த, விசாரணை தொடர்பாக கனடா பொலிஸார் அவரது உறவினர்களிடம் இருந்து தொடங்கியுள்ளனர்.

குறித்த, ரூபேஷ் ராஜ்குமார் என்பவருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை மாலை உயிரிழந்ததை தொடர்ந்து விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

முதல் கட்ட விசாரணை தொடங்கப்பட்ட பின்னர், தந்தையால் உயிரிழந்த ரியா ராஜ்குமாரின் நெகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், சுமார் 100 பேர் குறித்த 11 வயது சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர் சிறந்த பாடகர் மற்றும் நடன கலைஞர் என்பதை நினைவு கூர்ந்தனர்.

இந்திய வம்சாவளி சிறுமியானா ரியா ராஜ்குமார் (11) தனது தாயுடன் வாழ்ந்து வந்த நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தந்தையை சந்திக்கச் கடந்த வியாழக்கிழமை சென்றிருந்தார்.

இந்நிலையில், வெகு நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அவரது தாயார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, குறித்த தகவலுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார்,சிறுமியை அவரது தந்தையின் வீட்டிலிருந்து சடலமாக கண்டெடுத்துள்ளனர்.

அத்தோடு உயிரிழந்த சிறுமியின் தந்தையைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன்போது அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த குறித்த சிறுமியின் தந்தை சிகிக்சை பலனின்றி நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலை உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, விசாரணை ஆரம்பமாகியது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top