News

சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும்: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க படைகள் சிரியாவில் இருந்து வெளியேற வேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக அந்நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் அங்கு சண்டையிட்டு வருகின்றனர்.

சிரிய போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்யாவும் சுமார் 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை சிரியா அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன.

இதன் காரணமாக மீதம் இருக்கும் பகுதிகளைக் கைப்பற்ற இறுதிகட்டப் போர் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கப் படைகள் சிரியாவில் இருந்து வெளியேற வெண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் நாட்டின் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மூத்த ஆலோசகர் அலி அக்பர் கூறுகையில், ‘சிரியாவின் 90 சதவித பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. அமெரிக்கா இதனை செய்கிறார்களோ அல்லது மறுக்கிறார்களோ, நீங்கள் சிரியாவில் இருந்து வெளியேறியே ஆக வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top