News

ஜப்பானில் களைகட்டும் சப்போரோ பனித்திருவிழா

ஜப்பானின் சப்போரோ பகுதியில் பனித்திருவிழா களைகட்டியுள்ளது. அங்கு உருவாக்கப்பட்டுள்ள பனிச்சிற்பங்கள் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.  

ஜப்பானின் வடக்கு பகுதியில் சப்போரோ பனித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த குளிர்கால திருவிழா ஆகும். பிப்ரவரி மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள். இந்த திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பனிச்சிற்பங்கள் செய்யப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பனித்திருவிழா இன்று தொடங்கியது. 11-ம் தேதி வரை இத்திருவிழா நடைபெறுகிறது.


பனித்திருவிழாவையொட்டி, இந்த நகரத்தின் மூன்று பகுதிகளில் பனிச்சிற்பங்கள் பரவலாக அமைக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற கார்ட்டூன்கள், மலைகள், கட்டிடங்களின் வடிவமைப்பு, பனிக்குகைகள், விளையாடும் சிறுவர்கள், குதிரை பந்தயம் போன்ற அமைப்பில் இந்த பனிச்சிற்பங்கள் உள்ளன. 

இந்த சிற்பங்களில் 5 சிற்பங்களின் உயரம் 33 அடிக்கு மேல் உள்ளது. இந்த பனிச்சிற்பங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன. பனித்திருவிழாவில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களை காண ஏராளமான மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top