News

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டதொடர் இன்று ஆரம்பம்! முதல் நாளே இலங்கை குறித்து பேச்சு?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை விவகாரம் குறித்து இன்று கருத்து வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய கூட்டத்தொடரின் போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் ஆகிய இருவரும் உரையாற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த இருவரும் இலங்கையின் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இதன்போது கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ், “மனித உரிமைகள் நிகழ்ச்சிநிரல் உலகின் பல பகுதிகளிலும் சமூக நீதி மற்றும் மக்களின் உயிர்களை முன்னேற்றும் திறன் ஆகியவற்றின் எதிர்மறையான விளைவுகளை இழந்து வருகிறது.

கண்காணிப்பு, தவறான தகவல் பிரச்சாரங்கள் மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள் ஆகியவற்றால் ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இது பெரும்பாலும் வன்முறைக்கு வழிவகுக்கிறது” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, இன்று ஆரம்பமாகும் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி நிறைவடையும். இதன்போது இலங்கை தொடர்பில் இரண்டு விவாதங்கள் நிகழ்த்தப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கை தொடர்பில் மற்றுமொரு புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. பிரித்தானியா தலைமையில் ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து இந்த பிரேரணையை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top