News

டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலையில் 15 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல்!

டிரான்ஸ்-கனடா பகுதியில் 15 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல் காரணமாக குறித்த நெடுஞ்சாலை பகுதி மூடப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RCMP தகவலின் படி, குறித்த விபத்து டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலையில் Birchy Narrows க்கு அருகில் உள்ளூர் நேரம் சரியாக காலை 10:20 மணி அளவில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த விபத்தில் தகவல் அறிந்து வந்த பொலிஸார் காயங்களுடன் இருந்த ஆறு நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

குறித்த விபத்தில், மூன்று டிராக்டர் டிரெய்லர்கள் உள்ளிட்ட 15 வாகனங்கள் இடம்பெற்றுந்த நிலையில், வாகனங்கள் அதிக சேதம் ஏற்பட்டது குறித்த காணொளி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து,குறித்த பகுதிக்கு பனிச்சறுக்கு மற்றும் பனி வீசுதல் ஆகியவற்றினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கருதி குறித்த வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top