News

தயார் நிலையில் மைத்திரி! மற்றும் ஒருவருக்கு மரண தண்டனை

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தியமை மற்றும் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் மரணதண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2017 டிசம்பர் 11ஆம் திகதி, கொழும்பு – 14 எச்.ஆர். ஜோதிபால மாவத்தையில் 105 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, குறித்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

வெகு விரைவில் மரண தண்டனையை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், அரசாங்கமும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  இந்நிலையில், அலுகோசு பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதுடன், தூக்கு மேடையும் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top