Canada

நீதித்துறை செயற்பாடுகளில் தலையிட சீனா முயற்சி;கனடா குற்றச்சாட்டு!

கனடாவின் நீதித்துறை செயற்பாடுகளுக்குள் தலையிடுவதற்கு சீனா முயற்சிப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த தகவலை, ஒன்ராறியோவில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியின் விடுதலை தொடர்பாக சீனா தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,ஹுவாவி அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா கனடாவை வலியுறுத்தி வருகிறது. ஆனால், நீதிமன்ற செயல்முறைகளில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் கனேடிய நீதித்துறை அரசியல் அழுத்தங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top