Canada

பிராம்டனில் இந்திய வம்சாவளி சிறுமி கொலை! சொந்த தந்தையே கொலை செய்த சோகம்

பிராம்டனில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பீல் பிராந்திய பொலிஸ் தகவலில் படி குறித்த சம்பவத்தில், பிராம்டனை  சேர்ந்த ரியா ராஜ்குமார் என்ற 11 -வயது குழந்தை ஒருவர் வியாழன் இரவு சரியாக 11-மணியவில் தனது தாயிடம் திரும்பி வரவில்லை.

இதையடுத்து, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலில் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு குறித்த குழந்தை பிரம்ப்டனில் உள்ள ஒரு வீட்டில்  இறந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பீல் பிராந்திய பொலிஸ் மேற்கொண்ட விசாரணையில் குறித்த குழந்தையை அவருடைய தந்தை 41-வயது ரூபேஷ் ராஜ்குமார் என்பவர் கடத்தி கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த நபரை கைது செய்த பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top