Canada

பிரிட்டிஷ் கொலம்பியா அதி பயங்கர துப்பாக்கிச்சூடு – இருவர் படுகாயம்!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் சிக்கி இருவர் படுகாயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த, துப்பாக்கிச்சூடு பிரிட்டிஷ் கொலம்பியாவான்கூவர் பகுதியிலுள்ள வெஸ்ட் என்ட் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதில், 47 வயதான பெண்ணொருவரும், 24 வயதான ஆணொருவருமே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இது ஒரு பயங்கரமான தாக்குதல் என விவரித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதிவான சில காணொளி ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அதன் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top