Canada

மில்ட்டன் பகுதியில் துப்பாக்கி சூட்டு: விசாரணைகள் ஆரம்பம்!

மில்ட்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம், பிரதான வீதி கிழக்கு மற்றும் மெப்ல் அவனியூ பகுதியில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில், நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.55 அளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காயத்துக்குள்ளான சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், ஆபத்தான நிலையில் ஹமில்ட்டன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இச்சம்பவம் தொடர்பில், எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ஹமில்ட்டன் பிராந்திய பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top