Canada

வின்ட்சர் அதி பயங்கர வாகன மோதல் – பார்த்தசாரதி உயிரிழப்பு!

 

வின்ட்சர் St. Clair Township பகுதியில் இடம்பெற்ற வாகான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில், அதி வேகத்தில் விரைந்து வந்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே நேற்று(புதன்கிழமை) காலை 2-மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 27 வயதான காரின் சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து, காரணமாக St. Clair Township பகுதியில் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top