Canada

வின்ட்சர் பகுதியில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

வின்ட்சர் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் 40 வயதுடைய பெண் ஒருவர் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கத்தி குத்து தாக்குதல், வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் Thornberry Crescent இன் 6300 தொகுதிக்கு வின்ட்சர் பகுதியில் இடம் பெற்றது.

இதையடுத்து, குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காயங்களுடன் இருந்த நபரை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான காயங்கள் இன்றி நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,டவுன்டவுன் வின்ட்சர் பகுதியில் மற்றுமொரு குத்தல் தடுப்பு விசாரணை தொடர்கிறது.

குறித்த குத்தல், வின்ட்சர் நகரில் செயின்ட் 200 தொகுதியில் வெள்ளி காலை அதிகாலை 2:30.மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில், 34- வயதுடைய மனிதன் ஒருவன் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் அனைவரும் உடனடியாக Crime Stoppers தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top