Canada

ஸ்கார்பரோவில் வீடு இடிந்து தரை மட்டமானத்தில் அதிஸ்டவசமாக உயிர் பிழைத்த குடும்பம்!

ஸ்கார்பரோவில் உள்ள வீடு ஒன்று பகுதியளவில் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது, இருப்பினும் அங்கிருந்த கும்பத்தினர் அதிஸ்டவசமாக தப்பித்துள்ளனர்.

குறித்த, சம்பவம் கிங்ஸ்டன் வீதி மற்றும் பேர்ச்மெளண்ட் வீதிப் பகுதியில், ஹார்டிங் பவுல்வர்டில் உள்ள வீடு ஒன்றிலேயே நேற்று முன்தினம் சனிக்கிழமை 11.15 அளவில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் அவர்கள் குறித்த பகுதியை நெருங்குவதற்கு முன் வீடு இடிந்து தரை மட்டமானது. இது குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவிகையில், வீட்டில் இருந்த பொருட்கள் நகரத் தொடங்கிய வேளையில் தனது மகன் பயந்து சத்தமிட்டவாறு என்னை அழைத்துக் கொண்டிருந்தான்.

இதையடுத்து, நானும் எனது மகனும் பாதுகாப்பாக சத்தமிட்டு அலறி வீட்டை விட்டு வெளியேறினோம். இதன் பின்னர், சுமார் 45 நிமிடங்களின் பின்னர் வீட்டின் வடக்கே உள்ள செங்கல் கட்டுமானம் இடிந்து வீழ்ந்தது என கூறினார்.இதையடுத்து, அதன் அருகில் இருந்த ஐந்து வீடுகளில் அதன் தாக்கம் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கட்டிடம் இடிந்து வீழ்ந்தமைக்கான தெளிவான காரணம் இன்னமும் தெரியவில்லை என்ற போதிலும், அத்தி பாரத்தில் விரிசல் ஏற்பட்டமையால் இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் சந்தேகம் வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இது குறித்து ரொறன்ரோ தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அந்த கட்டிடத்தின் முதலாம் தளம் பெரும்பாலும் முற்றாக இடிந்து வீழ்ந்து விட்டது.

இதன் காரணமாக, வீட்டின் இரண்டாவது தளம் தற்போது பொறுப்பு அற்ற நிலையில் காணப்படுகின்றது. எனவே, அருகே உள்ள மேலும் சில வீடுகளில் இருந்தோரையும் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியேற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top