Canada

ஸ்கார்பரோவில் வாகன விபத்தில் சிக்கி மூன்று பேர் படுகாயம்!

ஸ்கார்பரோவில் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து, கிங்ஸ்டன் வீதி மற்றும் ஹன்ட் கிளப் டிரைவ் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றது.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து மீட்பு குழுவினர் அங்கு சென்றபோது 3 பேர் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ரொறன்றோ அவசர மருத்துவ சேவையின் துணை தளபதி, குறித்த மூவரில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும்,அவர்களின் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது.

அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top