Canada

ஹமில்டன் வாகன மோதலில் சிக்கி மூவர் படுகாயம்!

ஹமில்டனில் இடம்பெற்ற வாகன மோதலில் சிக்கிய மூவர் படுகாயமடைந்துள்ளதாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து, கார் ஒன்று தனது வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் ஒன்றுடன் மோதிக்கொண்டதனாலேயே இடம் பெற்றுள்ளது.

இதில், மூவர் படு காயமடைந்துள்ள நிலையில், அவர்களின் குறித்த வயது 38, 35 மற்றும் 30 என்று தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த பொலிசாரின் உதவியுடன் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இதில் காயமடைந்த 38 வயதான ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top