News

அமெரிக்காவில் சிறுமிக்கு இந்திய பாதிரியார் செக்ஸ் தொல்லை – 6 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

 

அமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இந்திய பாதிரியாருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2017ஆம் ஆண்டு தேவாலயப் பணிக்காக, இந்தியாவைச் சேர்ந்த ஜான் பிரவீன் என்ற பாதிரியார் சேர்ந்தார். இவர் 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜான் பிரவீன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மீதான விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அத்துடன் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தண்டனை பெற்ற ஜான் பிரவீன் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நான் என் மன்னிப்பைக் கோருகிறேன். மன்னிப்பு இதற்கு சரியாகாது என்று எனக்குத் தெரியும். இனி நான் யாரையும் துன்புறுத்த மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top