Canada

அல்பேர்டாவிற்கு விடுக்கப்பட்டுள்ளா பனிப்புயல் எச்சரிக்கை நீடிப்பு

 

அல்பேர்டாவிற்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை அல்லது இரவு பனிப்புயலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.சுமார் 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் -19 முதல் -30 செல்சியஸ் குளிர் காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top