Canada

அல்பேர்டாவில் மிதமான நிலநடுக்கம்

அல்பேர்டாவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

அல்பேர்டாவின் மத்திய பகுதியில் 4.6 ரிக்டர் அளவில் நேற்று(திங்கட்கிழமை) இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

19 கிலோ மீற்றர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதன்போது அதிகளவான சேதங்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை 2.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top