News

இடாய் சூறாவளி: மொசாம்பிக்- சிம்பாப்வேயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 120ஐ தாண்டியது

 

மொசாம்பிக், சிம்பாப்வே ஆகிய பகுதிகளை தாக்கிய இடாய் சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடும் காற்றின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 120ஐ தாண்டியுள்ளது.

பலர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மொசாம்பிக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62ஆக அதிகரித்துள்ளதுடன், சிம்பாப்வேயில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

மொசாம்பிக் குடியரசு எதிர்கொண்ட மிக மோசமான இயற்கை பேரழிவாக இந்த சூறாவளி அமைந்துள்ளது. மொசாம்பிக்கில் அனைத்தும் அழிந்துள்ளன. இந்நிலையில், மனித உயிரை காப்பாற்றுவதற்கு தாம் முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சர் தெரிவித்தார்.

 

 

மொசாம்பிக் குடியரசை இடாய் சூறாவளி கடந்த வியாழக்கிழமை இரவு தாக்கியது. அதனை தொடர்ந்து சிம்பாப்வேயை நோக்கி ஊடுருவியது. சிம்பாப்வேயில் கிழக்கு சிமனிமணி மாவட்டமே நாட்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும். குறித்த பகுதியில் வீடுகள், போக்குவரத்து மார்க்கங்கள் என அனைத்து வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பிற்குள்ளான பகுதிகளை இன்னும் அணுக முடியாத நிலையே காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top