News

இறுதிப்போர் நடந்த இடத்தில் கிடைத்த விடுதலைப் புலிகளின் இலக்கத் தகடுகள்!

 

 

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 இலக்கத் தகடுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலய வளாகம் ஒன்றில் சிவராத்திரி வழிபாட்டுக்காக நேற்று பொதுமக்களால் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதே விடுதலைப் புலிகளின் 25 இலக்க தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பிரதேச மக்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் இறுதிப்போர் நடைபெற்ற ஆலய வளாகப் பகுதி ஒன்றிலேயே இவ்வாறான தகடுகள் மீட்கப்பட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top