Canada

உலகை உலுக்கிய நியூசிலாந்து தாக்குதல் – மிசிசாகுகாவில் கண்ணீர் அஞ்சலி!

நியூசிலாந்தில் இருவேறு பள்ளி வாசல்களில்   நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களுக்கு மிசிசாகுகாவில் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுமார் 500ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். அத்தோடு,குறித்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர்.

 

மேலும், அங்கு வந்த மக்கள் குறித்த பயங்கரவாத தாக்குதலுக்கு தமது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தனர்.

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் கடந்த 15ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 42 பேர் காயமடைந்துள்ளனர்.

 

 

இதற்கிடையில், இச்சம்பவத்திற்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோவும் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து கொடூர தாக்குதல் – ரொறன்ரோவில் நினைவேந்தல் நிகழ்வு

 

நியூசிலாந்தில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் உயிரிழந்த 49 பேருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ரொறன்ரோ நதன் ஃபிலிப் சதுக்கப் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நகர மண்டபத்திற்கு வெளியே, குறித்த அந்தச் சதுக்கப்பகுதியில் அமைந்துள்ள ரொறன்ரோ சின்னத்தின் விளக்குகளின் ஒளி குறைக்கப்பட்ட நிலையில், அங்கு ஒன்றுகூடிய மக்கள் தமது இறுதி வணக்கத்தினைச் செலுத்தியதுடன், அங்கு குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்டோருக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கும் உரைகளையும் ஆற்றியிருந்தனர்.

 

 

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் கடந்த 15ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top