Canada

எத்தியோப்பியன் விமான விபத்தில் உயிரிழந்த பிராம்டனை சேர்ந்த குடும்பத்தின் ஆறு உறுப்பினர்கள்!

எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் 18 கனேடியர்கள் உயிரிழந்தனர். அதில்  பிராம்டனை  சேர்ந்த  குடும்பத்தின் ஆறு உறுப்பினர்கள் உயிர் இழந்துள்ளனர்.

சிறுவர்கள் Ashka Dixit (14) மற்றும் Anushka Dixit(13) விடுமுறையை கழிக்க அவரது பெற்ற்றோர் Kosha Vaidya(37), Preit Dixit (45)  மற்றும் தாத்தா பாட்டி Pannagesh Vaidya (73),  Hansini Vaidya (67) உடன் எத்தியோப்பியன் விமானத்தில் பயணித்தனர்.

சிறுவர்கள் பிறந்த இடமான கென்யாவை முதல் முறையாக காண்பிக்க கூட்டிச்சென்றதா கூறுகின்றனர் அவரது உறவினர்கள், Manant Vaidya மற்றும் Hiral Vaidya.

எத்தியோப்பியாவின் தலைநகரம்மான அடிஸ் அபாபாவில் இருந்து புறப்பட்ட எதியோபியான் விமானம் சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. கவலைக்குரியமாக, இவ்விபத்தில் குடும்பத்தின் அணைத்து உறுப்பினர்களும் உயிர் இழந்தனர்.  இவர்களையும் உட்பட  கனடாவை சார்ந்த 18 பயணிகள் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top