News

எந்தத் திருத்தங்களையும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது! ஜெனிவாவில் களமிறங்கிப் பேசிய தமிழர் தரப்பு

 

இலங்கை தொடர்பாக தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் எவ்வாறான திருத்தங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என தமிழர் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி பாதிரியார் எஸ்.ஜே. இம்மானுவேல் ஆகியோர் இக்கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 40ஆவது மனிதவுரிமைகள் மாநாட்டின் பக்கச் செயலமர்வில் கலந்து கொண்டு விவாதித்துவரும் தமிழர் தரப்பு இன்று முக்கியமான இக் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

 

 

ஜெனிவாவுக்கு வருகை தந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி பாதிரியார் எஸ்.ஜே. இம்மானுவேல் ஆகியோர் இன்று ஜெனிவா வளாகத்தில் பிரிட்டன் தலைமையிலான இலங்கை பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ள 24 நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி சுரேன் சுரேந்திரனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார். இதன் போது, அங்கு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளின் முக்கிய விபரங்கள் சில, இலங்கையானது பொறுப்புக்கூறல் பொறிமுறையை கால அட்டவணையுடன் கூடிய வகையில் முன்னெடுக்கும் வகையில் சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

 

அதேவேளை, இலங்கை தொடர்பாக தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் எவ்வாறான திருத்தங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை குறித்த 24 நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவக்கின்றன.

இக்கூட்டத் தொடரில் இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான சுமந்திரன், சிறீதரன், சிவாஜிலிங்கம், புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளான பாதிரியார் இம்மானுவேல், ஊடக பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top