Canada

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் எச்சரிக்கை!

 

 

மேற்கு கனடாவில் ஏற்கனவே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு ஆங்காங்கே மின் விநியோகத் தடைகளும், பல இடங்களில் வாகன விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா, சஸ்காச்சுவான் மற்றும் மானிடொபா..நாளை பலத்த பனிப்பொழிவு காணப்படும் என்று கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் சிறப்பு வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய, மேற்கு பிராந்தியங்களில் இருந்து வரும் தாழமுக்க நிலை ஒன்ராறியோவின் தெற்கு பிராந்தியங்களுக்கு பனிப்பொழிவைக் கொண்டுவரும் எனவும், ஞாயிறு காலையில் ஆரம்பமாகும் பனிப்பொழிவு இரவு முழுவதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கட்டடங்களின் கூரைகள், ஜன்னல்கள் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்படும். மரங்கள், கம்பங்கள் முறிந்து வீழ்வதால் மின்விநியோகம் தடைப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பனிப்பொழிவு 40C சென்ரிமீட்டர் வரையில் உயரும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று,மணிக்கு 40 முதல் 60கிலோமீற்றர் வரையிலான வேகத்துடன் பலத்த காற்று வீசும், என்பதால் மக்கள் அவதானத்துடன் செய்பட வேண்டும். மேலும், குறித்த பகுதியில் பனியில் உறைந்த உணவு ஓன்று இணையம் வழியாக வைரல் ஆகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top