Canada

கனடா புதியவர்களை வரவேற்கிறது: பிரதமர் ட்ரூடோ தகவல்!

 

புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும், புதியவர்களை வரவேற்பதாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ மிசிசாகாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குடியேற்றவாசிகள் பிரச்சினை அரசியல் மயமாக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கு கனேடியர்கள் தொடர்ச்சியாக ஆதரவை வெளியிட்டு வருகின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு முதல் காடுகள், வெளிகள் ஊடாக தரை மார்க்கமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கனடாவிற்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top