News

பொறுப்பு கூறுதலை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் – ஐ.நா

 

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதலை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென மனித உரிமைகள் பாதுகாப்பு மேம்பாடு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போதான அடிப்படைச் சுதந்திரம் ஆகியன தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பியூனோலா னீ அலோய்ன் வலியுறுத்தியுள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அதற்கான பொறுப்பு கூறுதலை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நியாயமான விசாரணை, சித்திரவதைகள் குறித்த முறைப்பாடு, மனிதாபிமானமற்ற அணுகுமுறை மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் ஒடுக்கப்படுவதனை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலீடாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top