Canada

சாஸ்கடூனில் வாகன விபத்து: உயிராபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

 சாஸ்கடூனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிராபத்தான நிலையிலேயே உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், எவ்வாறு விபத்து நிகழ்ந்தது, என்பன குறித்த மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

இரண்டாவது வீதி கிளியரன்ஸ் அவனியூப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் இவ்விபத்து குறித்து பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top