News

சீனாவில் துயரம் : சுற்றுலா பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 26 பேர் பலி

சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்தே நகரில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் நேற்று மாலை ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. வேகமாக சென்றதால் காற்றின் வேகம் காரணமாக, சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியது. உள்ளே இருந்தவர்கள் தீக்காயங்களுடன் அலறித் துடித்தனர்.
சீனாவில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 26 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மத்திய சீனாவில் ஒரு நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான தகவல்களை உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹுனான் மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த கோர விபத்து நேற்றிரவு உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 7.15-க்கு நிகழ்ந்துள்ளது. தீ விபத்து நிகழந்த பேருந்தில் 53 பயணிகள், ஒரு சுற்றுலா வழிகாட்டி, 2 டிரைவர்கள்  உட்பட 56 பேர் இருந்துள்ளனர். ஒரு சுற்றுலா வழிகாட்டி மற்றும் இரண்டு ஓட்டுனர்கள், இருவர் விபத்து காரணமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  59-சீட் கொண்ட பேருந்தானது உட்புறம் முழுவதுமாக எரிந்து எலும்பு கூடானது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் கடந்த 2 நாட்களுக்கு முன் நிகழ்ந்த   ரசாயன ஆலை ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு அதில் உயிரிழப்பு 47 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top