Canada

நெடுஞ்சாலை 402-ல் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பலி!

 

நெடுஞ்சாலை 402-ல் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் நெடுஞ்சாலை 402-ல் சரியாக திங்கட்கிழமை காலை 2-மணியளவில் லாங்வுட்ஸ் சாலை மற்றும் ஹிகரி டிரைவ் பகுதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இதில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அதிக காயங்களுடன் பெண் ஒருவர் இறந்த நிலையில்இருந்தாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குறித்த பகுதியின் நெடுஞ்சாலை சரியாக காலை 6-மணியளவில் மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top