News

பங்களாதேஷ் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

 

உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

டாக்காவிலுள்ள வணிக கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 19 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 70 பேர்வரை படுகாயமடைந்தனர்.

 

 

இந்நிலையில், அங்கு தொடர்ச்சியாக இன்றும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட கட்டடத்திற்குள்ளிருந்து நூறுக்கும் அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

பங்களாதேஷில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ அனர்த்தமொன்றில் 71 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top