Canada

பயங்கரவாத தாக்குதல்கள் எதிரொலி – மிகுந்த அவதானத்துடன் செயற்படும் கனடா புலனாய்வு துறை!

 

நியுஸிலாந்து தாக்குதலை அடுத்து கனடா போன்ற நாடுகளின் புலனாய்வுத் துறையினரும் இணையம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இணையம் உள்ளீடுகள் தொடர்பாக எந்த தருணத்திலும் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக கனடா மட்டுமின்றி நியுஸிலாந்து, அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் புலனாய்வு முகவரகங்கள் தங்களின் உச்சபட்ச அவதானத்தை செலுத்தி வருகின்றன.

இதில், வெறுக்கத்தக்க கருத்துப் பறி மாற்றங்கள் மற்றும் தீவிரவாத மூளைச் சலவைகளை எதிர்த்துப் போரிடுவதற்கும், குற்ற வாளிகளைத் தண்டிப்பதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக நியுஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் அண்மையில் கருத்து தெரிவிக்கையில், இதுவொரு தனிப்பட்ட நாட்டினுடைய பிரச்சினையல்ல எனவும், சர்வதேச பிரச்சினையாக கவனத்தில் எடுத்து உலக அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top