Canada

பள்ளி வாகனம் மோதலில் சிக்கி 5-பேர் மருத்துவமனையில் அனுமதி!

 

 

பள்ளி வாகனம் மோதலில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 5- பேர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து, Concession 10 Elderslie மற்றும் Sideroad 5 Elderslie பகுதியில் Arran-Elderslie என்ற இடத்தில் அரங்கேறியுள்ளது.

இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்களில் ஒருவர் சிகிக்சைக்காக தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து கடந்த வியாழக்கிழமை மாலை 4-மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களில் பள்ளி வாகான ஓட்டுனர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் வேறு எந்த தகவலும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top