Canada

பிரம்டன் கொலை குற்றச் சாட்டில் பெண் கைது- உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆண்!

 

 

பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதில், குறித்த கொலை குற்றச்சாட்டு தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

குறித்த சம்பவம், பிரம்டன் பகுதி லாரெர்ரெஸ்ட் மற்றும் வோடடன் தெருக்களில் காலை சுமார் 4:10 மணி நேரத்தில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வேறு எந்த தகவலும் வெளியிட்டப்படவில்லை.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top