News

பூரண ஹர்த்தால்; வடக்கின் பல பகுதிகளும் முடங்கின…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட அதேவேளை, வடக்கிலும் சில இடங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

 

 

இன்று கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் நடத்தப்படும் ஹர்த்தால் வடக்கிலும் நடக்குமா என்று நேற்று நள்ளிரவு வரையில் குழப்பமமான நிலை காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை யாழ். நகரில் வர்த்தக நிலையங்கள் திறந்து இயல்பு நிலை காணப்பட்டது. ஆனாலும் கிளிநொச்சி நகரம், யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி, சங்கானை, வடமராட்சிப் பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

 

யாழ். குடநாட்டில் சில பகுதிகளில் மாத்திரம், பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. ஏனைய இடங்களில் இயல்பு நிலை காணப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top