News

பெர்லினில் 20 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட அழகு தேவதை!

 

 

அழகே உருவான தேவதை போன்ற ஒரு இளம்பெண்ணை காரணமே இன்றி ஒருவன் 20 முறை கத்தியால் குத்திக் கொலை செய்ய, அதையும் பயன்படுத்தி அரசியல் லாபம் பார்த்தன சில கட்சிகள்.

பெர்லினில் வசிக்கும் Karin Gross, ஒரு நாள் பணி முடிந்து வீடு திரும்பியபோது வழக்கத்துக்கு மாறாக கதவு திறந்திருக்க, உள்ளே நுழைந்தவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

அங்கே அவரது ஒரே மகள் Keira (14) உடலெங்கிலிருந்தும் இரத்தம் ஆறாக ஓட, சோஃபா ஒன்றில் அமர்ந்திருக்க, அவளது வாய் இரத்தம் தோய்ந்த ஸ்கார்ஃப் ஒன்றால் கட்டப்படிருந்தது.

 

 

பதறிப்போன Karin மருத்துவ உதவியை அழைக்க, அவர்கள் வந்து தங்களாலான மட்டும் முயற்சி செய்துவிட்டு, Keira இறந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். ஒருபக்கம் பொலிஸ் விசாரணை நடக்க, மறுபக்கம் நாடு முழுவதும் வேறொரு ஆன்லைன் பரபரப்பு போய்க்கொண்டிருந்தது.

ஏற்கனவே ஜேர்மன் சேன்ஸலர் நாட்டுக்குள் அகதிகளை அனுமதித்த பிரச்சினை பற்றியெரிந்து கொண்டிருக்க, அதைப் பயன்படுத்திக் கொண்ட வலது சாரியினர், யாரோ ஒரு அகதிதான் Keiraவைக் கொலை செய்து விட்டதாக கொளுத்திப் போட்டனர்.

இன்னொருவர் ஒரு செச்சன்ய இஸ்லாமிய இளைஞன்தான் Keiraவைக் கொன்று விட்டதாக ஒரு இளைஞனின் படத்துடன் முகநூலில் ஒரு பதிவை இட்டார். நாடெங்கும் அகதிகளுக்கெதிரான செய்திகள் பரவிய நிலையில், பொலிசார் அது போலிச் செய்தி என பதிவிட வேண்டியதாயிற்று.

 

 

இந்நிலையில் Keiraவின் தாயாருக்கு பொலிசாரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. தாங்கள் குற்றவாளியைக் கைது செய்து விட்டதாகவும், வந்து பார்க்குமாறும் பொலிசார் அழைக்க, பொலிஸ் நிலையம் சென்ற Karinக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

கைது செய்யப்பட்ட இளைஞன் Keiraவின் நண்பர்களில் ஒருவன், ஆனால் நெருங்கிய நண்பன் அல்ல. அவனுக்கு Keiraவை கொலை செய்ய வேண்டிய காரணம் என்ன இருந்திருக்க முடியும் என Karin திகைக்க, விசாரணையின் முடிவுகள் எரிச்சலூட்டும் வித்ததில் அமைந்திருந்தன.

தனக்கு நண்பர்கள் யாரும் கிடைக்காததால், தன்னை யாரும் நல்லவனாக பார்ப்பதில்லை, எனவே இனி கெட்டவனாக பார்க்கட்டும் என முடிவெடுத்திருக்கிறான் அவன்  பேட்மேன் கதையில் வரும் ஜோக்கர் வில்லனைப்போல மேக் அப் அணிந்து கொண்டு நடமாடிய அவன், தன்னை கெட்டவனாக காட்டுவதற்காக ஒன்றும் அறியாத அழகு தேவதையாக வலம் வந்த Keiraவை 20 முறை கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறான்.

 

 

கொலை செய்த பிறகும் அதற்காக வருந்தவோ, கவலைப்படவோ செய்யாத அந்த இளைஞன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கிறான். என் மகளுக்கு விடை கொடுக்கவோ, அவளிடம், நான் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லவோ கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறும் Karin, இது தனக்கு கிடைத்த நீதி அல்ல, தனக்கு நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை என்கிறார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top