News

போர் பதற்றத்தைத் தணிக்க மத்தியஸ்தம் வழங்கத் தயார் – சீனா

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தைத் தணிக்க மத்தியஸ்தம் வழங்கத் தயார் என, சீனா அறிவித்துள்ளது.

சீனாவில் தேசிய மக்கள் காங்கிரஸ் எனப்படும் நாடாளுமன்ற கூட்டம் பீஜிங்கில் நடைபெற்றது. இதன்போது, சீன வெளிவிவகார அமைச்சர், Wang Yi, செய்தியாளர் சந்திப்பிபை நடத்தினார்.

இதன்போது, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட விரும்புவதாக அறிவித்தார்.

சீன வெளிவிவகார பிரதியமைச்சர் அண்மையில் பாகிஸ்தான் சென்று வந்த நிலையில், அவரை இந்தியாவுக்கும் அனுப்பி இது குறித்து கலந்துரையாட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனா தனது வெளிவிவகார பிரதியமைச்சரை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அனுப்பும் இரண்டாவது சந்தரப்பம் இதுவாகும், இதற்கு முன் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போதும் சீன பிரதியமைச்சரை அனுப்பிவைத்தது.

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் உறவை வளர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், தொலை நோக்கு பார்வை காரணமாகவே இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய சீனா விரும்புவதாகவும், சீன வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top