News

மகிந்தவின் கைகளில் இருக்கும் முன்னாள் போராளிகளின் விபரங்கள் அடங்கிய ஆவணம்!

 

 

படையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் விபரங்கள் அடங்கிய ஆவணம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் காணப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

அரசியல் கைதிகள் குறித்து 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுடன் பல்வேறு சந்திப்புகள் இடம்பெற்றன. இதன் போது முன்னாள் போராளிகளின் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை எங்களுக்கு காண்பித்தனர்.

அத்துடன், அவர்களை வவுனியா முகாமுக்கு சென்று பார்வையிட முடியும் எனவும் கூறினார்கள். எனினும், முகாமுக்கு சென்ற போது இராணுவத்தினர் எங்களை அனுமதிக்கவில்லை.

முன்னாள் போராளிகளதும் அரசியல் கைதிகளதும் விவரங்கள் குறித்து ஏழுக்கும் மேற்பட்ட ஆவணங்களை எங்களிடம் காட்டினார். அந்தப் பட்டியல் தற்போதும் அரசாங்கத்திடம் காணப்படுகின்றதாக நாம் நம்புகின்றோம்.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top