Canada

 மிஸ்சூசாகாவில் சாலையை கடந்த பார்த்த சாரதிக்கு நேர்ந்த சோகம்!

 

மிஸ்சூசாகா பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் பார்த்த சாரதி ஒருவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீல் பிராந்திய பொலிசாரின் தகவலில் படி, குறித்த சம்பவம்   மிஸ்சூசாகா விமான நிலையம் மற்றும் மார்னிங்ஸ்டார் டிரைவ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சரியாக 2:30 -மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர பிரிவினர் காயங்களுடன் இருந்த குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், மருத்துவமனையில் அவருக்கு உயர் சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. விசாரணையில், குறித்த பெண் சாரதி சாலையை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து அரங்கேறியுள்ளது.

இதையடுத்து, குறித்த பகுதியில் சாலைகள் மூடப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு ஆதார புகைப்படம் மற்றும் காணொளிகள் எடுக்கப்பட்டால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top