News

மைக்கேல் ஜாக்சன் பாடல்களுக்கு உலகளாவிய தடை !

 

புகழ்பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்சன் தொடர்பில் வெளியான சிறார் பாலியல் துஸ்பிரயோக ஆவணப்படத்தால் உலகெங்கிலும் உள்ள டசின் கணக்கிலான வானொலி நிலையங்கள் முக்கிய முடிவை அறிவித்துள்ளது.

இதன்படி பிரித்தானியா, கனடா, நோர்வே, நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் டசின் கணக்கான வானொலிகளில் இனிமேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிபரப்புவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

ஜாக்சன் தொடர்பில் சமீபத்தில் வெளியான ஆவணப் படம் ஒன்றில், அவர் சிறார்களை தமது பாலியல் இச்சைக்காக பயன்படுத்தி வந்ததாகவும், 10 வயது சிறுவன் ஒருவனுடன் போலியான திருமண நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதும் அம்பலமானது.

இது சர்வதேச அளவில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவரது குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், இது கொச்சையான வியாபார நாடகம் எனவும் விமர்சித்தனர்.

 

 

இருப்பினும் மைக்கேல் ஜாக்சனுக்கு ஆதரவாக சிலர் தங்கள் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த ஆவணப் படத்தை பார்வையிட்ட அவரது ரசிகர்கள் பலர் பிரபலமான பல வானொலி நிலையங்களுக்கு அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, மைக்கேல் ஜாக்சனின் பாடல்களை ஒலிபரப்புவதில்லை என உலகின் பல முக்கிய வானொலி நிலையங்கள் அறிவித்துள்ளன. நியூசிலாந்தில் உள்ள மொத்த குடிமக்களில் பாதி பேர் கொண்டாடும் முக்கிய இரு வானொலி நிலையங்கள், நேயர்களின் கோரிக்கையை ஏற்று, மைக்கேல் ஜாக்சனின் பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்துள்ளது.

 

 

பிரித்தானியா மற்றும் கனேடிய வானொலிகளும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. மட்டுமின்றி மேலும் பல நாடுகளில் உள்ள வானொலி நிலையங்கள் நேயர்களின் கோரிக்கையை ஏற்று இந்த வரிசையில் இணையலாம் என கூறப்படுகிறது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top