Canada

யோர்க் பிராந்தியத்தில் நான்காவது மாதமாக தொடர்ந்தும் சுற்றிவளைப்பு – 8 பேர் அதிரடியாக கைது!

 யோர்க் பிராந்தியத்தில் நான்காவது மாதமாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது, எட்டுப்பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதன்போது மில்லியன் கணக்காண டொலர்கள் பெறுமதியான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள பொலிஸார் ஆறு தேடுதல் அனுமதிகளின் அடிப்படையில் பல இடங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது போதைப் பொருள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையம் ஒன்றினை கைப்பற்றி அழித்த சிறப்பு நடவடிக்கை குழுவினர், சுமார் ஐந்து மில்லியன் டொலர்கள் பெறுமதியான போதைப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யேர்க் பிராந்தியத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளிலேயே, அதிகளவு போதைப் பொருட்கள் இந்த நடவடிக்கையின் போதே கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒன்பதாவது நபரை தேடி வருவதாகவும், இந்த சிறப்பு நடவடிக்கை தொடர்பிலான மேலதிக விபரங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) யோர்க் பிராந்திய பொலிஸார் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஊடக மாநாட்டில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top