Canada

ரயில் மீது பாதசாரதி ஒருவர் மோதி உயிரிழந்த சோகம்!

 

ரயில் மீது பாதசாரதி ஒருவர் மோதி கொண்டதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த, வாகான மோதல் சம்பவம் அவென்யூ மற்றும் 20 வது தெருவில் (20th Street and Avenue) சரியாக 5:21 -மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பொலிஸார் காயங்களுடன் இருந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றனர். இருப்பினும், அவர் சிகிக்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இருப்பினும், குறித்த நபர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இதில், வியாழன் இரவு, சுமார் 8:15 ரயில் கிளம்பியதையடுத்து போக்குவரத்து தடைகள் அகற்றப்பட்டன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top